குடிநீர் தொட்டிக்கு அருகில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-01-11 11:41 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா மலையனூர் செக்கடி கிராமம் மதுரவீரன் கோவில் தெரு குடிநீர் தொட்டிக்கு அருகில் குப்பையை தெரு ஓரம் கொட்டி எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுப்படுவதுடன் ஊர் மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் தூசுகள் விழுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைத்தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவார்களா?

-திவ்யபாரதி. மலையனூர். 

மேலும் செய்திகள்