திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஒன்றியம் அல்லித்துறை பகுதியில் உள்ள ஊர்புற நுலக கட்டிடத்தின் வாசலில் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். நீண்ட நாட்களாக அள்ளப்படாததால், குப்பை மலைபோல் தேங்கியுள்ளது. மேலும் சில நேரங்களில் மர்மநபர்கள் குப்பைகளை தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.