சாலையோரம் கொட்டப்படும் குப்பை

Update: 2024-12-22 10:34 GMT

நியூ திருப்பூர் அருகே ரவுண்டானாவில் இருந்து பெருமாநல்லூர் நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் என்.வி லேண்ட் ரோடு அருகில் கிழக்கே பெரிய ஊஞ்சக்காடு செல்லும் ரோட்டோரத்தில் மூட்டை மூட்டையாக அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த இடம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்