நோய் பரவும் அபாயம்

Update: 2024-12-08 17:12 GMT

 கருப்பூரில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளின் எதிரே கோழி இறைச்சிக் கழிவு, உணவக கழிவுகள், பிளாஸ்டிக் கவர்கள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகனங்களில் செல்வோருக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்.

-தர்மர், கருப்பூர். 

மேலும் செய்திகள்