புதர்களில் விஷ பூச்சிகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் செடி-கொடிகள் அதிகம் வளர்ந்து புதர்கள் போன்று இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் வரும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாம்பு,தேள் மற்றும் விஷப்பூச்சிகள் சாலையில் நடமாடுவதைக் கண்டு அச்சமடைகின்றனர். எனவே செடி-கொடிகள் சூழ்ந்த புதரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சுதாகர், திருப்பூர்.