சுகாதார சீர்கேடு
தாராபுரம் ரோடு எம்.ஜி.பி. தியேட்டர் பகுதியில் பள்ளிவாசல் அருகில் 56-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் குப்பை தொட்டியில் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் பழைய கோழிக் கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டி செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கின்ற குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டியை இப்பகுதியில் இருந்து அகற்றும் படி பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுகிறேன்.
-முருகன், திருப்பூர்.