குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-09-22 07:39 GMT

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதை ஒட்டி குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அத்துடன் கால்வாயிலும் குப்பைகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

செந்தில்குமார், மேட்டுப்பாளையம்.

மேலும் செய்திகள்