ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதி சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.