வேலூர் பாலாற்றில் ஆங்காங்கே மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பாலாறு முழுவதும் குப்பைகள் நிறைந்த பகுதிகளாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தெருக்களில் குப்பைகளை சேகரித்து ஊழியர்கள் ஒரு சிலர் புதிய பஸ் நிலையம் முத்து மண்டபம் அருகே உள்ள பாலாற்றில் குப்பைகளை கொட்டுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.