கோட்டை பூங்காவில் குவியும் குப்பைகள்

Update: 2022-10-05 12:51 GMT

வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் மாலை பொழுதில் கோட்டை முன்பு உள்ள பூங்காவில் அமர்ந்து பொழுதுப் போக்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் ஒரு சிலர் அந்தப் பகுதியில் விற்பனை செய்கின்ற பொருட்களை வாங்கி சாப்பிட்டதும் காலியான பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே வீசி செல்கின்றனர். இதனால் கோட்டை பூங்கா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளாகவே காட்சியளிக்கிறது. மேலும் அங்குள்ள ஊழியர்களுக்கு பூங்கா பராமரிப்பின் போது சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூங்காவில் அமரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி காலிப் பொருட்களை குப்பைத் தொட்டியில் போட அறிவுறுத்த வேண்டும்.

-வரதராஜன், வேலப்பாடி. வேலூர்.

மேலும் செய்திகள்