வேலூர் சத்துவாச்சாரி பாப்பாத்தியம்மன் கோவில் தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் மர்மநபர்கள் சிலர் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் நடைபாதையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்தக் குப்பைகளை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் இழுத்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே நடைபாதையில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலவன், வேலூர்.