திருவண்ணாமலை மாநகராட்சியுடன் வேங்கிக்கால் ஊராட்சி பகுதி இணைக்கப்பட்டுள்ளது. வேங்கிக்காலில் உள்ள தெரு பகுதிகளில் முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை. மேலும் கழிவுநீர் கால்வாய்களில் தூர்வாருவதும் கிடையாது. எனவே இதுகுறித்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு முறையாக குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் கால்வாய்களை தூர்வார வேண்டும்.
-சிவன், திருவண்ணாமலை.