வேலூர் புதிய பஸ் நிலையத்தில் முழுமையான பஸ் போக்குவரத்துத் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பஸ்நிலைய வளாக சுகாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. தண்ணீர் பாட்டில்கள், குப்பைக் கழிவுகள் குப்பை தொட்டிகளில் போடப்படாமல், பயணிகளால் ஆங்காங்கே வீசி எரியப்படுகிறது. பஸ்நிலைய வளாகத்தில் சுகாதாரத்தை பேண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜேக்கப்மார்ட்டின், சாமுவேல்நகர் வேலூர்.