திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பின்பக்கம் உள்ள புறவழிச்சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையையொட்டி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் காணப்படுகிறது. அருகில் உள்ள கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரம் கொட்டிவிட்டு செல்கின்றனர். பிளாஸ்டிக் கவர், டம்பளர் போன்றவற்றை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் இந்த நிலையில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் கிடப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையையொட்டி சாலையோரம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரியா, திருவண்ணாமலை.