ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து தூர்வாரி அள்ளப்படும் குப்பைகளை கால்வாயில் ஓரமாகவே கொட்டுகின்றனர். பின்னர் அந்தக் குப்பைகள் காய்ந்த பின்னர் வண்டிகள் மூலம் வாரி அப்புறப்படுத்துகின்றனர். அவ்வாறு வாரப்படும் குப்பைகள் கழிவு நீர் கால்வாய் ஓரம் கொட்டுவதால் தினமும் மழை பெய்வதால் மீண்டும் அது கழிவுநீர் கால்வாயிலேயே தேங்குகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. எனவே தினமும் அள்ளப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றப்படுமா?
சங்கர், ஆற்காடு.