வேலூர் நேஷ்னல் தியேட்டர் சந்திப்பு அருகே உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு பெரிய கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் அளவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக கழிவு நீர் சீராக செல்வதில்லை. அங்கு தேங்கும் கழிவு நீரால் துர்நாற்றமும், கொசு தொல்லையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராகவன், கஸ்பா.