ஆம்பூர் மளிகைத்தோப்பு பகுதியில் இருந்து துத்திப்பட்டு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பாலாறு தரைப்பாலம் அருகே குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், இங்கு குப்பை கொட்டக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.