ஆமைவேக மழைநீர் கால்வாய்பணிகள்

Update: 2025-09-14 10:44 GMT

சென்னை போரூர் ஆலப்பாக்கம் பகுதியில் ஏராளமான குடியிருப்புவாசிகள் உள்ளனர். இங்குள்ள ஏகாம்பரம் எஸ்டேட் மழை நீர் கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மழைநீர் தேக்கமடைவதால் கொசுக்கள் உற்பத்தியாவது அதிகமாகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் இந்த வழியையே பயன்படுத்துகிறார்கள். பயங்கர துர்நாற்றம் வீசுவதால் முக சுளிப்புடன் பாதசாரிகள் ன்கடந்துசெல்லும் அவலநிலை இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்