திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை (ஆண்கள் ) உள்ளது. இந்த அறை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. அறை முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் பயணிகள் காத்திருப்பு அறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறையை சுத்தம் செய்யவும், முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.