பூங்கா எதிரே குப்பைகள் கொட்டும் அவலம்

Update: 2025-09-07 18:17 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை தர்மராஜா கோவில் பகுதியில் இருக்கும் வேதாசலம் முதலியார் பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அந்தப் பூங்கா எதிரே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவில் பூங்காவுக்குள் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் பூங்காவை புதுப்பித்து, தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரவள்ளி, அரக்கோணம்.

மேலும் செய்திகள்