செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அய்யன்சேரி சாலை மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் இல்லாத அவலநிலை நீடிக்கிறது. ஏற்கனவே சில இடங்களில் இருந்த குப்பை தொட்டிகளும் அகற்றப்பட்டு உள்ளது. இதனால் அந்த சுற்றுப்புற பகுதி குடியிருப்பு வாசிகளின் இல்லத்தில் சேரும் குப்பைகளை காலியிடங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத இடங்களில் தூங்கி வீசி செல்லும் அவலம் இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியின் சுகாதாரத்தை பேணும் வகையில் குப்பைத்தொட்டிகள் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.