ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா, பெரியபட்டிணம், பண்ணக்கரை ரோடு, லண்டன் தெருவில் உள்ள சாலையோரங்களில் குப்பை அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. தேங்கி குப்பைகளால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து மேற்கண்ட இடத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றவும் கூடுதல் குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.