குப்பைகள் தேக்கம்

Update: 2025-09-14 11:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு பஞ்சாயத்து அலுவலகம் செல்லும் சாலையில் மர்ம நபர்கள் குப்பைகளை ஆங்காங்கே கொட்டிவருகிறார்கள். இதனால் அந்த சாலை முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மேலும் சுகாதார சீர்கேடால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்