புதிய குப்பை தொட்டி தேவை

Update: 2022-08-20 16:29 GMT

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வங்கிகள், பள்ளிகள், கோர்ட்டுக்கு செல்லும் சாலை இந்த பகுதியில் தான் உள்ளது. மேலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாலையோரம் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். அங்குள்ள குப்பை தொட்டி சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி அங்கு புதிய குப்பை தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

-கணேசன், புதிய வீட்டு வசதி வாரியம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்