ஓசூர் தேர்பேட்டையில் அரசு ஊழியர் குடியிருப்பு பின்பகுதியில் இருந்து சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையோரம் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்களும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இதனை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை முன் வருவார்களா?.
-மஞ்சுநாதன், தேர்பேட்டை, ஓசூர்.