சாலையில் கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-07 16:19 GMT

கிருஷ்ணகிரியில் சென்னை- பெங்களூரு, சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் போகும் வழியில் அதிகளவு குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த குப்பைகளை அங்கு வரும் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து கிளறி விடுகின்றன. இதனால் குப்பைகள் சாலையில் சிதறிக்கிடக்கின்றன. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமகிருஷ்ணன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்