திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறைக்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் காவிரியில் புனித நீராடிய பிறகு தாங்கள் அணிந்திருந்த பழைய ஆடைகளையும், பரிகாரம் செய்ய வருபவர்கள் பரிகாரத்தில் பயன்படுத்திய பொருட்களையும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும் ஆங்காங்கே விட்டு செல்வதால் படித்துறை முழுவதும் தூய்மையின்றியும், சுகாதாரமின்றியும் காணப்படுகிறது. அங்கே சுற்றித்திரியும் நாய்கள் இதனை கவ்விக்கொண்டு வந்து சுற்றியுள்ள பல இடங்களை மேலும் அசுத்தமாக்கி விடுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தூய்மையையும், சுகாதாரத்தையும் காப்பதற்கான நிரந்தர தீர்வு காணவேண்டுகிறோம்.