ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா அருகே சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஏரிக்கரையோரம் குப்பைகள், கெட்டுப்போன இறைச்சி மற்றும் கோழிக்கழிவுகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இதனை கண்காணித்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.மணி, ஓசூர்.