பெங்களூரு ஹெப்பால் பகுதியில் எஸ்.எஸ்.ஏ. சாலையில் உள்ள நடைபாதை ஓரத்தில் மின்கம்பம் அருகில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அந்த குப்பைகளை நாய், மாடுகள் சாலையில் இழுத்துபோட்டு விடுகின்றன. இதனால் அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.