ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே குடியிருப்புகள், கல்லூரி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் ஆகியவைகள் உள்ளன. அப்பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி தீயிட்டு எரிப்பதால் நச்சுப்புகை எழுந்து அந்த வழியாக செல்வோருக்கும், அங்கு வசிப்போருக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய குமார், அரக்கோணம்.
-விஜய குமார், அரக்கோணம்.