தர்மபுரி மாவட்டம் மாதேமங்கலம் ஊராட்சி வெங்கட்டம்பட்டி கிராமத்தில் நரசிம்மர் கோவில் பின்புறம் உள்ள குடியிருப்புகளில் சேரும் குப்பை கழிவுகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் குப்பை தொட்டி அமைத்துள்ளது. இந்த தொட்டியில் குவியும் குப்பைகளை அகற்றாமல் இருப்பதால், குடியிருப்பு பகுதி மற்றும் கோவில் பகுதிகளில் தூர்நாற்றம் வீசுகிறது. தினமும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேல், மாதேமங்கலம், தர்மபுரி.