சேந்தமங்கலம் சோமேஸ்வரர் ஓடையில் இருந்து உபரி நீர் அங்குள்ள தொன்மை வாய்ந்த தெப்பக்குளத்திற்கு கொண்டு செல்ல தீவிர பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த வாய்க்கால் செல்லும் பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். எனவே அங்கு குப்பைகளை கொட்டாமல் வேறு இடத்தில் கொட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிவசந்திரன், சேந்தமங்கலம்.