ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக அரசு பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் போடப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அப்படியே தீவைத்து எரிக்கின்றனர். இதனால் புகை மூட்டத்தின் காரணமாக பள்ளிக் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணி, ஏரியூர்.