நோய் பரவும் அபாயம்

Update: 2025-11-09 14:35 GMT

நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பகுதிகளில் அதிக அளவு கோழி மற்றும் ஆடு, மாடு போன்ற இறைச்சி கடைகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து இறைச்சி கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே சாலைகள் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்படலாம். இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு அனைத்து இறைச்சி கடைகளிலும் இருந்து வரும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நடராஜ், அத்தனூர்.

மேலும் செய்திகள்