கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒட்ட பிள்ளையார் கோவில் சாலையில் 5 அடி தூரத்திற்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் அள்ளப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆவதால், தற்போது மழை பெய்யும் நேரங்களில் குப்பைகளில் தண்ணீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.