அரியலூர் நகரில் உள்ள கைலாசநாதர் கோவில் தெருவில் ஏராளமான வீடுகள், கடைகள் இயங்கி வருகின்றன. இந்த தெரு வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் அதிகளவில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தெருவோரங்களில் அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் விழுகிறது. தெருநாய்களும், கால்நடைகளும் குப்பைகளை கிளறி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்ப்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.