சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் புறநகர் பகுதியில் உள்ள சாலையில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் காற்றி பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. எனவே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?