சுகாதார சீர்கேடு

Update: 2022-07-26 16:59 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் செல்லும், சனத்குமார் நதியில் தினமும் கெட்டுப்போன இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுப்பொருட்களை கொட்டுகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பாலா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்