மயிலாடுதுறை நகரில் சீனிவாசபுரம் பாரதியார் தெருவில் குப்பை தொட்டி இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை