பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா தொம்மசந்திரா ஒரு தொழிற்பேட்டை பகுதி. இங்கு தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் அதிகளவு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொம்மசந்திரா அரசு ஆஸ்பத்திரி அருகே கடந்த சில மாதங்களாக குப்பைகள் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளால், மழை நேரங்களில் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடுகிறது. இந்த ஆஸ்பத்திரி வழியாக செல்லும் சாலைகளில் தினமும் தொழிலாளிகள் மற்றும் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த சாலையில் குப்பைகள் கிடப்பதால் மாணவர்கள், தொழிலாளிகளால் நடந்து செல்ல முடியவில்லை. மூக்கை மூடி கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். தொம்மசந்திரா கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் உடனே அந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.