Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Oct 2023 2:50 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41275

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

மற்றவை

பெங்களூரு நாகவரா பகுதியில் கே.ஆர்.புரம் செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. மேலும் சாலை பள்ளங்கள் காரணமாக அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்துகிறது. உயிர் சேதம் ஏற்படும் முன்பு அந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 2:49 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41274

உடைந்து கிடக்கும் நடைபாதையால் ஆபத்து

மற்றவை

பெங்களூரு குப்பண்ணா எஸ்டேட் பகுதியில் தனியார் பள்ளி அருகே சாலையோரம் சாக்கடை கால்வாய்க்கு மேல் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையை பள்ளி மாணவர்கள் மற்றும் அந்தப்பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடைபாதை சிலாப்பு ஒன்று உடைந்து குழிபோன்று காணப்படுகிறது. இதனால் நடைபாதையில் செல்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சேதமடைந்த நடைபாதை சிலாப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 2:48 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41273

சாலை பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

சாலை

பெங்களூரு ஒரமாவு அகாரா மெயின் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் அந்த சாலையில் வருபவர்கள் விபத்துகளில் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 2:47 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41272

குவியும் குப்பை கழிவுகள்

மற்றவை

பெங்களூரு கஸ்தூரிநகர் 3 மற்றும் 4-வது சாலை சந்திப்புகளில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசுகின்றனர். தற்போது அந்த சாலையின் ஓரத்தில் மலைப்போல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவி பாதிப்பு ஏற்படுத்துவதற்குள், மாநகராட்சி ஊழியர்கள் குப்பை கழிவுகளை அகற்றவும், மீண்டும் அங்கு குப்பை கழிவுகள் குவிக்கப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 2:47 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41271

உயரமான மரங்கள் வெட்டப்படுமா?

மற்றவை

பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு அருகே உயரமான மரங்கள் உள்ளன. அந்த மரங்களை பயன்படுத்தி மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றை வெட்டி அகற்றுமாறு மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 2:46 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41270

சாலை பள்ளத்தால் அவதி

மற்றவை

பெங்களூரு குண்டலஹள்ளி 8-வது கிராஸ் சாலையில் மார்க்கெட் ஒன்று உள்ளது. இதனால் அந்த சாலையில் எப்போதும் வாகன நெருக்கடி அதிகமாக காணப்படும். தற்போது அந்த சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலை பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 3:17 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41075

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு சஞ்சய்நகர் 80 அடி சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் அந்த பகுதிக்கு வரும் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவிட்டு செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே பாதசாரிகளுக்கு இடையூறாக நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அங்கு நிறுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 3:17 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41074

சேதமடைந்த நடைபாதை சிலாப்புகள்

மற்றவை

பெங்களூரு இந்திராநகர் டபுள்ரோட்டில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள சிலாப்புகள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் அந்த நடைபாதையை இரவு நேரங்களில் பயன்படுத்துவோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 3:17 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41073

சாலை பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

மற்றவை

பெங்களூரு பெல்லந்தூர் கிரின் லே-அவுட் பகுதி அருகே ஒரு சாலை உள்ளது. அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சாலை பள்ளங்களை மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 3:16 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41072

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

மற்றவை

பெங்களூரு வர்த்தூர் மாரியம்மன் கோவில் அருகே குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு அருகே குப்பை கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அங்கு மலைப்போல் குப்பை கழிவுகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பை கழிவுகளை கால்நடைகள் கிளறி சாலையில் தள்ளிவிடுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 3:15 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#41071

பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் சேதம்

மற்றவை

பெங்களூரு இந்திராநகர் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது அந்த பஸ் நிறுத்தத்தின் இருக்கைகள் சேதமடைந்து உள்ளது. இதனால் பயணிகள் அதில் அமர முடியாமல் கால்கடுக்க காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 4:25 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40879

காணாமல் போன தார்சாலை

சாலை

பெங்களூரு ஆண்டரஹள்ளி அருகே ஜனனி என்கிலேவ் குடியிருப்பு பகுதியில் தார்சாலை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த சாலை மண்சாலையாக காட்சி அளிக்கிறது. தார்சாலை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதன்பிறகு அந்த சாலையை சீரமைக்க மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick