Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Sep 2023 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40676

புதர்மண்டி கிடக்கும் நடைபாதை

மற்றவை

பெங்களூரு கப்பன் பூங்கா அருகே உள்ள லாவல்லே சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை, எம்.ஜி. ரோடு செல்பவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது அந்த நடைபாதையில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த செடிகளை விரைவாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:53 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40675

சாலையில் நடமாடும் கால்நடைகள்

சாலை

பெங்களூரு கே.ஆர்.புரம் மார்க்கெட் பகுதியில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவை சாலைகளில் படுத்து கிடப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தாமல் இருக்க கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:53 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40672

குழாய் தோண்டும் பணியால் பாதிப்பு

சாலை

பெங்களூரு பின்னிபேட்டை சாலையில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு தோண்டப்பட்ட மணல், சாலையின் ஓரத்தில் மலைபோல குவிக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்பேட்டையில் இருந்து மெஜஸ்டிக் பஸ் நிலையம் வரும் இந்த சாலையில், பல வாரங்களாக பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:52 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40669

நடைபாதை அமைக்கும் பணியால் அவதி

மற்றவை

பெங்களூரு பசவனகுடியில் இருந்து சாம்ராஜ்பேட்டை செல்லும் பிரதான சாலையில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிக்காக ‘பேவர் பிளாக்’ கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவித்து வைத்துள்ள கற்களை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:52 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40668

அறிவிப்பு பலகை சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு அல்சூர் கேட் பகுதியில் ஆஞ்சநேயர் சாமி சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. அதன் அருகே உள்ள எச்சரிக்கை பலகை, தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அந்த சாலையில் உள்ள பலகையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 2:41 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40455

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை

பெங்களூரு காட்டன்பேட்டை பகுதியில் முதலாவது கிராசில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பள்ளம் மூடப்படவில்லை. இந்த நிலையில் நேற்று அந்த சாலையில் வந்த கார் பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க அந்த சாலையை விரைவாக சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 2:40 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40454

சாலையில் வைக்கப்படும் கற்கள்

சாலை

பெங்களூரு பேடராயனபுரா 4-வது கிராஸ், 2-வது மெயின் சாலையில் குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பு பகுதியின் முன்பு சாலையின் ஓரங்களில், அந்த பகுதியினர் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக கற்களை வைத்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் அந்த கற்கள் மீது மோதி விபத்தை சந்திக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அவற்றை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 2:39 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40453

மோசமான நிலையில் பொது கழிவறை

மற்றவை

பெங்களூரு ஜே.பி.நகர் 24-வது மெயின் 178-வது வார்ட்டில் பொது கழிவறை ஒன்று உள்ளது. அந்த கழிவறை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியினர் பெரிதும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பயனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து அந்த கழிவறையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 2:37 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40452

பூங்காவில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

மற்றவை

பெங்களூரு கிரிநகர் பகுதியில் புஷ்பாஞ்சலி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் காலை, மாலை நேரங்களில் வயதானோர் பலர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பூங்காவில் குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே பூங்காவில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 2:39 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40215

மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு ராமதேவி லே-அவுட் 14-வது பிளாக்கில், சாலை ஒன்று உள்ளது. அந்த சாலை தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் சாலை பள்ளங்களில் தேங்குகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 2:38 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40214

ஒளிராத தெருவிளக்குகள்

மற்றவை

பெங்களூரு ஆடுகோடி 8-வது கிராஸ் சாலையில் குடியிருப்புகள் உள்ளன. ஆனால் அந்த குடியிருப்பு பகுதி அருகே மின்விளக்குகள் முறையாக ஒளிராமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் ஏதும் இல்லாததால், குற்றச்சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்குள்ள மின்விளக்குகளை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 2:38 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#40213

மழைநீர் தேங்கி குட்டையாக மாறிய சாலை

சாலை

பெங்களூரு அம்ருதஹள்ளி 2-வது பிளாக் 9-வது கிராஸ் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையின் இருபுறங்களிலும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டைப் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick