கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-21 16:54 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சின்னத்தம்பிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் சமீபகாலமாக கோழிக்கழிவுகளை மூட்டையில் கட்டி போட்டுவிட்டு செல்கின்றனர். இந்த கோழிக்கழிவுகளால் பஸ் நிறுத்தம் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். எனவே சாலையோரம் கோழிக்கழிவுகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதன், திருச்செங்கோடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்