கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பையனப்பள்ளி அருகே மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த பகுதி சாலையோரங்களில் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும்போது மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிச்சாமி, கிருஷ்ணகிரி.