கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உழவர் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மாடுகள் கூட்டம், கூட்டமாக உழவர் சந்தையின் உள்ளே புகுந்து அங்குள்ள காய்கறிகளை தின்றும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், ஓசூர்.