குப்பைகள் அள்ளப்பட்டன

Update: 2022-07-20 14:41 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பஸ் நிலையம், கடைவீதி, ரேஷன் கடை ஆகிய பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதனால் துர்நாற்றம் வீசியதுடன் அந்த பகுதி மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அந்த பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி தூய்மைப்படுத்தினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-கிருபாகரன், ஏரியூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்