சேலம் சித்தனூரை அடுத்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே சாலையின் ஓரத்தில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தவாறு செல்லும் அவல நிலை உள்ளது. இந்த பகுதியில் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குருபாலன், சர்க்கார்கொல்லப்பட்டி, சேலம்.