பள்ளி அருகே குப்பை கொட்டலாமா?

Update: 2026-01-18 14:23 GMT

வீரபாண்டி ஒன்றியம் ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி காம்பவுண்டு சுவர் அருகே குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகி வருகின்றனர். சிலர் குப்பைகளில் தீ வைத்து எரிக்கின்றனர். எனவே குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்