கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையோரத்தில் கட்டிட கழிவுகள், குப்பைகள் வீசப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகள், கட்டிட கழிவுகளை அகற்றுவதுடன் அவற்றை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.