பாதிரிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு பல்வேறு விதமான தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.